ADDED : ஏப் 14, 2025 05:28 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் சார்பில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
இயேசு மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூரும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.
ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கின்றனர்.
நேற்று காலை தேனி ரோட்டில் உள்ள பள்ளியில், ஆர்.சி., சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி., திருச்சபைகளை சேர்ந்த குருக்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கையில் குருத்தோலை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்களை பாடிக்கொண்டு தங்கள் சபைக்குச் சென்று, வழிபாட்டில் பங்கேற்றனர்.
மேலுார்: மேலுாரில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு சி.எஸ்.ஐ., சபை ஆயர் தினகர ஏசுபாதம், ஆர்.சி., திருச்சபை பாதிரியார் முரளி ஆனந்த் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. குருத்தோலையை ஏந்திய மக்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருச்சபை பாடலை பாடியவாறு சென்றனர்.

