நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை அருகே அதலை தாமரை குளக்கரையில் ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது.
50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. நேற்று காலை மரத்தின் அடியில் கிடந்த காய்ந்த மட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
காற்றுக்கு தீ பனை மரத்தின் உச்சி வரை பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் அணைத்தனர். 30 ஆண்டுகள் பழமையான 20 பனை மரங்கள் எரிந்து கருகின. சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.