/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதித்ததால் விலை உயர்ந்தது; வேலை குறைந்தது! பேரையூரில் வேலை இழந்த தொழிலாளர்கள்
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதித்ததால் விலை உயர்ந்தது; வேலை குறைந்தது! பேரையூரில் வேலை இழந்த தொழிலாளர்கள்
மழையால் செங்கல் உற்பத்தி பாதித்ததால் விலை உயர்ந்தது; வேலை குறைந்தது! பேரையூரில் வேலை இழந்த தொழிலாளர்கள்
மழையால் செங்கல் உற்பத்தி பாதித்ததால் விலை உயர்ந்தது; வேலை குறைந்தது! பேரையூரில் வேலை இழந்த தொழிலாளர்கள்
UPDATED : அக் 14, 2024 06:37 AM
ADDED : அக் 14, 2024 04:12 AM

பேரையூர்: தொடர் மழை காரணமாக பேரையூர் பகுதிகளில் செங்கல் விலை உயர்ந்துள்ளது. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவிக்கின்றனர்.
பேரையூர் வட்டாரத்தில் சாப்டூர், வண்டாரி, டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, எழுமலை, சிலைமலைப்பட்டி, கீழப்பட்டி பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. உள்ளூர் தேவை போக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை திருச்சி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இப்பகுதியில் தொழிலாளர்கள் மண்ணை குறிப்பிட்ட பதத்தில் பிசைந்து அச்சுகள் மூலம் வார்த்தெடுக்கின்றனர். அவற்றை வெயிலில் உலர்த்தி, சூளையில் அடுக்கி, தீவைத்து செங்கலை சுடவைத்து உற்பத்தி செய்கின்றனர். பெரும்பாலும் கோடை காலத்தில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம்.
நடப்பாண்டிலும் பல்வேறு பகுதிகளிலும் செங்கல் உற்பத்தியை தொழிலாளர்கள் தீவிரப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான சூளைகளில் உற்பத்தி செய்த செங்கலை வெயிலில் உலர்த்த அடுக்கி வைத்துள்ளனர். சிலநாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் சுடப்படாத செங்கல்கள் நனைந்து சேதமடைகின்றன. மழையால் வேலை பாதிக்கிறது. வேலை நடக்காததால் உற்பத்தி குறைந்து இயல்பாகவே செங்கல் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் தொழிலாளர்களுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். இப்பகுதியில் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
தொழிலாளி பால்பாண்டி: ஒரு வாரமாக மழையால் வேலை செய்ய முடியவில்லை. ஏற்கனவே தயார் செய்த செங்கலையும் காய வைக்க முடியவில்லை. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வருமானம் கிடைப்பதில்லை. மிகவும் சிரமத்தில் உள்ளோம்.
கடந்த மாதம் செங்கல் ஒன்று ரூ.5.50 விற்கப்பட்டது. தற்போது மழையால் செங்கல் உற்பத்தி பாதித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு செங்கல் ரூ.7.20 க்கு விற்கிறது. உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''மழையால் உலர்த்தப்படாத செங்கல்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது செங்கல் உற்பத்தி செய்தாலும், அவற்றை காய வைக்க முடியாது. நனைந்து வீணாகி விடும்.
இதனால் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். மழை தொடர்ந்தால் செங்கல் விலை மேலும் உயரும்'' என்றனர்.