ADDED : மே 26, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் பனை மரங்களில் பதநீர் உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
பேரையூர், எஸ்.மேலப்பட்டி, சந்தையூர், கீழப்பட்டி, வண்டாரி,சாப்டூர் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் ஜூலை வரை நுங்கு, பதநீர் சீசன் நேரம். ரோடு ஓரங்களில் விற்கப்படும் பதநீரை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பருகி வருகின்றனர். பதநீரில் கருப்பட்டி தயாரிக்கின்றனர்.
உற்பத்தி குறைந்துள்ளதால் கடந்த மாதம் லிட்டர் ரூ.70 க்கு விற்ற பதநீர், தற்போது ரூ.100க்கு விற்கிறது.
இதனால் கருப்பட்டி விலையும் இந்தாண்டு அதிகரிக்கும் என பனைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.