/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆற்றுப் படித்துறையை சீரமைக்க வேண்டும்
/
ஆற்றுப் படித்துறையை சீரமைக்க வேண்டும்
ADDED : மே 18, 2025 02:57 AM

சோழவந்தான்: 'திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயில் எதிரே உள்ள ஆற்றுப்படித்துறையை சீரமைக்க வேண்டும்' என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்குள்ள சிவன் கோயில் மிகவும் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்தது. இதன் எதிரே பெரிய படித்துறை உள்ளது.
காசி, ராமேஸ்வரத்திற்குஅடுத்து முன்னோர்களுக்கான தர்ப்பணம் இங்குதான் அதிகளவில் நடைபெறும். தினமும் இங்கு வரும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இப்படித்துறையை பயன்படுத்துகின்றனர்.
இந்தப் படித்துறை உடைந்தும், புதர்மண்டியும், குப்பைநிறைந்தும் மோசமாக உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து அர்ச்சகர் முத்துச்செல்வம் கூறியதாவது:
படித்துறையின் அனைத்து பகுதிகளுமே சேதம் அடைந்திருந்தன. விவேகானந்தா கல்லுாரி சார்பில் சில பகுதிகளை சீரமைத்து கொடுத்தனர். வேறுசில பகுதிகள் அதிகமாக சேதமடைந்துள்ளன.
இங்கே கழிவறை வசதி இல்லாததால், படித்துறை சுகாதாரகேடுடன் உள்ளது.அதிகாரிகள் படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.