/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முப்பதே நாட்களில் ரோடு ஜல்லி ஜல்லியா போச்சுப்பே...
/
முப்பதே நாட்களில் ரோடு ஜல்லி ஜல்லியா போச்சுப்பே...
முப்பதே நாட்களில் ரோடு ஜல்லி ஜல்லியா போச்சுப்பே...
முப்பதே நாட்களில் ரோடு ஜல்லி ஜல்லியா போச்சுப்பே...
ADDED : அக் 11, 2025 04:20 AM

மேலுார்: மேலுாரில் 30 நாட்களுக்கு முன் அமைத்த ரோட்டில் சிமென்ட் பெயர்ந்து புழுதி பறக்கிறது. சாலை முழுவதும் ஜல்லிக் கற்களாக மாறியதால் மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோடு, திருவாதவூர் ரோட்டை இணைக்கும் நொண்டிக் கோவில் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் மாவு, தேங்காய் அரைப்பது, கறிக்கடை, ரைஸ் மில், பலகார கடைகள் என அனைத்து வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.4 லட்சம் செலவில் இந்த ரோடு சிமென்ட் ரோடாக அமைக்கப்பட்டது. அதற்குள் சிமென்ட் காரை பெயர்ந்து, ரோடு ஜல்லிக் கற்களாக மாறிவிட்டது
அப்பகுதி மக்கள் கூறியதாவது: ரோட்டை தரமற்ற முறையில் அமைத்ததால் அப்போதே தடுத்து நிறுத்தினோம்.
அதன்பின் அமைத்த ரோட்டையும் தரமற்ற முறையில் அமைத்ததால் சாலை முழுவதும் ஜல்லிக் கற்களாக மாறிவிட்டது. ரோட்டில் இருந்து கிளம்பும் எம் சாண்ட், துாசி கடைகளில் உள்ள உணவுப் பொருட்களில் படிகிறது.
மேலுார் தாலுகா பகுதியினர் பலரும் இந்த ரோட்டில் உள்ள அரவை நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர்.
துாசி படிந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவோர் தொற்று நோய்க்கும், சுவாசக் கோளாறு, நுரையீரல் தொற்று போன்றவற்றால் அவதிப் படுகிறோம்.
மக்களின் வரிப்பணம் புழுதியாக பறக்கிறது. நகராட்சி அதிகாரி நேரில் ஆய்வு செய்து தரமான ரோடு அமைக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிமென்ட் சாலை அமைத்ததும் உடனடியாக பயன்படுத்தியதால் ரோடு சிதிலமடைந்து விட்டது. உடனடியாக சாலை சரி செய்யப்படும் என்றனர்.