ADDED : ஜன 08, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியின் பெரிய கண்மாயான நிலையூர் பெரிய கண்மாய் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மறுகால் பாய்ந்து தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
வைகை அணை தண்ணீர் நிலையூர் கால்வாய்கள் வழியாக இக்கண்மாயில் நிரம்பும். இக்கண்மாய் தண்ணீர் மூலம் 1,200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய் நிரம்பினால் 25 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இரண்டு ஆண்டுகளுக்கு நீர்நிலைகள் வற்றாது.
இந்தாண்டு சமீபத்தில் வைகை அணையில் திறந்த தண்ணீரால் இக்கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மறுகால் தண்ணீர் திருமங்கலம் பகுதி சொக்கனாம்பட்டி, கப்பலுார் சின்னகுளம், விடத்தக்குளம் உள்பட 10க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று அப்பகுதி விவசாயிகளுக்கு பயன்தரும்.
