ADDED : ஜன 22, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை நாடார் மஹாஜன சங்கம், திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள காலியிடங்கள், கண்மாய் கரைகளில் 47 ஆயிரம் விதை பந்துகள் துாவப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன் துவக்கி வைத்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈ.வே.ரா. மேல்நிலைப்பள்ளி, மாணவியர் விதைப்பந்துகள் துாவினர். பின்பு நாடார் மஹாஜன சங்க நிர்வாகிகள் மரக்கன்றுகள் நட்டனர்.