/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்
/
தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்
ADDED : அக் 16, 2024 02:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம்
வில்லாபுரம் அடுத்த கற்பகநகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன்
கார்த்திக். இவர், தீபாவளி சீட்டு பிடித்து, அதிலிருந்து கிடைத்த ரூ.3
லட்சத்தை தந்தையிடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு
(அக்.,15) அந்த பணத்தை திரும்பி கேட்கும்போது மகன் - தந்தை இருவருக்கும்
தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தந்தை லோகநாதனின்
கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பாக
போலீசார் விசாரித்து வந்த நிலையில், கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனில்
சரணடைந்தார்.