/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலம்பத்தில் பரவை மாணவர்கள் அசத்தல்
/
சிலம்பத்தில் பரவை மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 28, 2025 03:37 AM

வாடிப்பட்டி : டில்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
இதில் பங்கேற்ற பரவை ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு பிரிவுகளில் கிரிதரன், ஹரி பிரசாத், ககன் ஸ்ரீ, தாரிகா, அழகேஸ்வரி, சிவ கிருத்திகா, கஸ்மிகா, சாதனா ஸ்ரீமான், துருவன், தேவா என 10 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்களை தீர தயா, பார்த்தி நாராயணன், கார்த்திகேயன், சாதனா தேவி, துளசிமணி பெற்றனர். இம் மாணவர்களை, பயிற்சியாளர்கள் முத்து நாயகம், இன்பவள்ளி மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.