ADDED : செப் 20, 2026 04:52 PM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் இரண்டாமாண்டு அனைத்து துறை களிலும் தமிழ் பாடம் படிக்கும் மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடந்தது. தாங்கள் படிக்கும் தமிழ் பாடப் புத்தகத்திலுள்ள பாடங்களை மாணவர்களுக்கு மாணவர்களே நடத்தினர்.
மாணவி வர்ஷினி வரவேற்றார். மூவேந்தர் வரலாறு, சேர மன்னர்கள் என்ற தலைப்பில் மாணவி ஆனந்தலெட்சுமி,
திணை வாழ்வியல், வணிகம் என்ற தலைப்பில் மாணவி சுபேதா, திணை வாழ்வியல் உணவு என்ற தலைப்பில் மாணவி கீர்த்தனா, திணை வாழ்வியல் விளையாட்டுகள் என்ற தலைப்பில் மாணவி ஞானசவுந்தரி, தொழில் நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் மாணவி தாரணி உட்பட பலர் பாடம் நடத்தினர். மொத்தம் 310 மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் ராமசுப்பையா நிறைவுறை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் காயத்ரிதேவி, பேராசிரியர்கள் மல்லிகா, திருஞானசம்பந்தம், முனியசாமி மதிப்புரை வழங்கினர். மாணவி சுபேதா தொகுத்து வழங்கினார். மாணவி சிவசக்தி நன்றி கூறினார். பேராசிரியர் தேவிபூமா ஒருங்கிணைத்தார்.
