தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயமுறுத்துது முடுவார்பட்டி பஸ் ஸ்டாப்

 பயமுறுத்துது முடுவார்பட்டி பஸ் ஸ்டாப்

 பயமுறுத்துது முடுவார்பட்டி பஸ் ஸ்டாப்


ADDED : மே 12, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டியில் பழுதடைந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கின்ற பரிதாப நிலை தொடர்கிறது.

வெள்ளையம்பட்டி ரோட்டில் உள்ள முதல் பஸ் ஸ்டாப்பில் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட தினமும் ஏராளமானோர் மதுரை பகுதிக்கு சென்று வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பஸ் ஸ்டாப் பராமரிப்பின்றி 7 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து வருகிறது. இருந்தும் இன்று வரை பராமரிக்கவில்லை.

இதனால் சிமென்ட் மேற்பூச்சு பெயர்ந்து விழுகின்றன. கட்டடங்களை சுற்றி 'மெகா சைஸ்' விரிசல் விட்டுள்ளது. வாகனங்கள் பஸ் ஸ்டாப்பை கடந்து செல்லும் போது கட்டடம் அதிர்கிறது. இதனால் பஸ் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாப்பை இடித்து புதிதாக கட்ட பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us