ADDED : ஜன 12, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், பொங்கல், சிறப்பு பட்டிமன்றம் என முப்பெரும் விழா நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜெயக்கொடி 'இளைஞர்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தர்' எனும் தலைப்பில் பேசினார். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை, சமூக ஆர்வலர் ஷீலா, யோகா ஆசிரியை நந்தினி பரிசு வழங்கினர்.
நமது வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி தருவது பணமா ஆரோக்கியமா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. முதல்வர் தேவதாஸ் நடுவராக செயல்பட்டார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடு செய்தார். தேசிய வலிமை மாத இதழின் ஆசிரியர் சுவாமிநாதன், வழக்கறிஞர் கமலானந்த் பங்கேற்றனர்.
