ADDED : ஏப் 07, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் ஆண்டு விழா, நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா, விளையாட்டு விழா நடந்தது.
செயலாளர் தசரதராமன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். நான்காம் தமிழ்ச் சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி ஆண்டு மலரை வெளியிட, முதல்வர் சாந்திதேவி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களுக்கு கடம்பவனம் ரிசார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சித்ரா பரிசு வழங்கினார். உதவி பேராசிரியர் கோகிலா நன்றி கூறினார். விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
