sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆன இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை ஆக. 4க்கு ஒத்திவைப்பு

/

தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆன இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை ஆக. 4க்கு ஒத்திவைப்பு

தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆன இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை ஆக. 4க்கு ஒத்திவைப்பு

தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆன இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை ஆக. 4க்கு ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 31, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சாத்தான்குளம் தந்தை , மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 17 பக்கம் கொண்ட 'அப்ரூவர்' மனுவை தாக்கல் செய்ததையடுத்து, வழக்கு விசாரணையை மாவட்ட நீதிமன்றம் ஆக., 4க்கு ஒத்தி வைத்தது.

துாத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும், 2020ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ., தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை, 2ம் கட்டமாக கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளுக்குமேலாக இவ்வழக்கு நடக்கிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அப்ரூவர் ஆவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அம்மனு மீது ஏற்கனவே நடந்த விசாரணையில், அப்ரூவர் ஆவதற்கான உண்மையான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.

இதனிடையே நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 17 பக்க பதில் மனுவை ஸ்ரீதர் தாக்கல் செய்தார்.

அதன்மீது ஆக., 4ல் முடிவெடுப்பதாக தெரிவித்து நீதிபதி ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us