ADDED : ஜூன் 08, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்,: திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறை நாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக சுவாமிகளுக்கு முகூர்த்தப்பட்டு துணிகள் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. சிவாச்சாரியார்கள் திருமண சடங்குகளை செய்தனர். பின்னர் திருக்கல்யாண விருந்து நடந்தது. இன்று (ஜூன் 8) தேரோட்டம், ஜூன் 9 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
ஏற்பாடுகளை இணைகமிஷனர் கிருஷ்ணன், உதவிகமிஷனர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.
மீனாட்சி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் சுப்புலட்சுமி, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.