நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மேலஉரப்பனுாரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ. 9 லட்சம் மதிப்பிலான நாடக மேடை, கரடிக்கல்லில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பஸ் ஸ்டாப்பை மாணிக்கம் தாகூர் எம்.பி., திறந்து வைத்தார்.
எம்.பி., கூறுகையில், ''தமிழகத்தில் வரலாற்று சின்னங்கள் அதிகம் உள்ள மதுரையில் வரலாற்று சின்னங்களை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது. டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். அதற்கான உறுதிமொழியை மத்திய அரசு அளிக்க வேண்டும். மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவேன்'' என்றார்.

