ADDED : ஆக 26, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கீழமாத்துார் ஊராட்சி ஆதி திராவிடர் காலனி முனீஸ்வரன் கோயில் மந்தை திடலில் நாடக மேடை தேவை என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
பெரியசாமி கூறிய தாவது:
இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. முனீஸ்வரன், மந்தை காளீஸ்வரி கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மண் திட்டு மேடையில் தான் 11 நாள் கோயில் திருவிழாவிற்கான ஆடல் பாடல் நிகழ்ச்சி கள், கிராமிய நாடகம் மற்றும் பொங்கல் விழா நடைபெறும்.
நாடக மேடை இல்லாததால் இல்ல விழா நடத்த சிரமப்படுகிறோம். தொகுதி எம்.எல்.ஏ., செல்லுார் ராஜூ உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.