ADDED : ஆக 04, 2025 05:04 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.எம்.எம், கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், பரந்தாமன், அருண் விஜயன் உள்பட தி.மு.க. வினர் மாலை அணிவித்தனர். மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க., சார்பில் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன் தலைமையில், விவசாய அணி இணைச்செயலாளர் குமார், துணைச் செயலாளர் முத்துக் கிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் பாண்டுரங்கன் மரியாதை செய்தனர். தமிழ்நாடு முக்குலத்தோர் நலச்சங்க கவுரவ தலைவர் செந்தில்குமார், தலைவர் சார்லஸ், துணைத் தலைவர் ஆதி முத்துக்குமார் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.