ADDED : ஜன 31, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: தாதம்பட்டி செந்தில்குமார் 50. வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பெயின்ட் கடை வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பெயின்ட் லோடு இறக்க கடையை திறந்தார்.
பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 76 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

