ADDED : ஜன 09, 2026 06:20 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன. 19ல் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம், தெப்ப முகூர்த்தம் கோயில் அலுவலகத்தில் நடந்தது.
ஸ்தானிக சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் மேளங்கள் முழங்க கோயில் அலுவலகம் சென்றனர். அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியாவிடம் தேங்காய் தொட்டு கொடுத்து, தெப்பத் திருவிழா விவரங்களை கோயில் பேஷ்கார், நெடுஞ்செழியன் வாசித்தனர். கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்தியசீலன் கலந்து கொண்டனர்.
திருவிழா நடைபெறும் ஜி.எஸ்.டி., ரோடு பகுதி தெப்பக்குளம் கரையில் யாகம் வளர்த்து சுத்தியல், உளி, அரிவாள், மிதவை தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து பூஜை, தீபாரதனை நடந்தது. பின்பு மிதவை தெப்பம் அமைப்பதற்கான நிகழ்வு நடந்தது.
