ADDED : ஜன 28, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜன. 29) தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்கான தெப்ப முகூர்த்தம் நடந்தது.
தெப்பத் திருவிழா நடைபெறும் ஜி.எஸ்.டி., ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குளம் கரையில் யாகம் வளர்த்து சுத்தியல், உளி உள்பட மிதவை தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது.

