ADDED : பிப் 05, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் பாலத்தில் தடுப்பு, ரவுண்டானா இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
இங்கு வைகை வடகரை திருவேடகம், தேனுார் ரோட்டையும், தென்கரை மேலக்கால், மதுரை மெயின் ரோட்டையும் இணைக்கும் பாலம் உள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்பு, ரவுண்டானா இல்லை. இதனால் வாகனங்கள் செல்லும் திசை தெரியாமல் மோதும் நிலை ஏற்படுகிறது. இரவில் போதுமான விளக்குகள் இல்லை.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இரு கரைகளிலும் ரவுண்டானா அமைக்க இடவசதி இல்லை. மேலும் 'T' சந்திப்பாக உள்ளதால் தடுப்பு அமைத்தால் வாகனங்கள் மோதும் நிலை ஏற்படலாம். எச்சரிக்கை பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது' என்றனர்.
