/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரமநாதபுரத்தில் 20 நாட்களாக குடிநீர் இல்லை
/
பரமநாதபுரத்தில் 20 நாட்களாக குடிநீர் இல்லை
ADDED : பிப் 20, 2025 05:43 AM

கொட்டாம்பட்டி: பரமநாதபுரத்தில் குடிநீர் சப்ளை செய்யும் தொட்டியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கிராமத்தில் வசிக்கும் 400க்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் இரு இடங்களில் போர்வெல் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
ஓராண்டுக்கு முன் பயன்பாடின்றி போகவே மின்வாரியத்துறையினர் 2 மீட்டர் பெட்டிகளை கழற்றிச் சென்றனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நாட்களாக குடிநீருக்கு அலைவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: ஊராட்சி நிர்வாகம் கடிதம் கொடுத்தால் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்கின்றனர். ஊராட்சி செயலாளர் சசிகுமார் கடிதம் கொடுக்க காலம் கடத்துகிறார்.
அலட்சியத்தால் 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை. அதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ. 15க்கு வாங்குகிறோம் என்றனர்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா கூறுகையில், பரமநாதபுரத்தில் பிளாஸ்டிக் தொட்டிக்கு ஓரிரு நாளில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றார்.