/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எடை வைத்த நெல்லை ஏற்ற லாரி இல்லை விவசாயிகளை கண்டுகொள்ள யாருமில்லை 4 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்

ADDED : பிப் 19, 2026 05:49 AM

மேலுார்: இ.மலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை வைத்த நெல்லை கோடவுனிற்கு கொண்டு செல்ல லாரி வராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இக்கிராமத்தில் ஆண்டிற்கு இருமுறை நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படும். சேண்டலை பட்டி, கீழவளவு, கொங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரம் மூடை நெல் துாற்றி, எடை வைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கோடவுனிற்கு கொண்டு செல்ல லாரிகள் வராததால் நெல்மூடைகள் தேங்கி கிடக்கின்றன.
விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்த நெல்லை பத்து நாட்களுக்கும் மேலாக திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளோம். எடை வைத்த நெல்லை ஏற்றாததால் இடப்பற்றாக்குறையால் மீதமுள்ள 7 ஆயிரம் மூடை நெல்லை எடை வைக்கவில்லை. தவிர நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை செய்ய முடியாமல் வயலில் நெல் உதிர்வதோடு, குருணையாக உடையும் அவலம் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.