ADDED : மார் 07, 2024 05:45 AM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: கள்ளழகர்கோயில் பங்குனித் திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மார்ச் 25ல் நடைபெற உள்ளது.
சிறப்பு அலங்காரத்தில் சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வர். காலை 9:10 மணிக்கு மேல் 9:40க்குள் பெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெறும். இந்நிகழ்வில் மட்டுமே ஆறு மூர்த்திகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும் என கோயில் துணைக்கமிஷனர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
