/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு
/
கமிஷனர் இல்லாமல் திருமங்கலம் தத்தளிப்பு
ADDED : பிப் 13, 2024 04:30 AM
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி கமிஷனராக இருந்த டெரன்ட்ஸ் லியோன் மாற்றப்பட்ட பின்பு 2 மாதங்கள் கழித்து நித்தியா என்பவர் கமிஷனராக பொறுப்பேற்றார். சில நாட்களிலேயே பதவி உயர்வு காரணமாக இடமாறிச் சென்றார்.
அதன் பின்பு 6 மாதங்களுக்கும் மேலாக கமிஷனர் பணியிடம் காலியாகவே உள்ளது. விருதுநகர் நகராட்சி கமிஷனர் லீமா கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். நகராட்சி அதிகாரிகள் கமிஷனருக்குமே முறையான தகவல் தெரிவிக்காத நிலை இருப்பதால் 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி கூட்டம் நடந்தது தனக்கு தெரியாமல் நடந்ததாக தெரிவித்தார்.
கமிஷனர் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு இரண்டு ஆண்டுகளில் 4 கமிஷனரை நியமித்த அரசு திருமங்கலம் நகராட்சிக்கு உடனடியாக கமிஷனரை நியமிக்க வேண்டும்.