/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடுக்குது இரும்பு கம்பிகள் அச்சத்தில் திருநகர் மக்கள்
/
தடுக்குது இரும்பு கம்பிகள் அச்சத்தில் திருநகர் மக்கள்
தடுக்குது இரும்பு கம்பிகள் அச்சத்தில் திருநகர் மக்கள்
தடுக்குது இரும்பு கம்பிகள் அச்சத்தில் திருநகர் மக்கள்
ADDED : ஜூன் 16, 2025 12:15 AM

திருநகர்: திருநகர் காந்திஜி முதல் தெரு வழியாக தேவி நகர், பாலாஜி நகர் செல்வோர் சென்று திரும்புகின்றனர். 7வது பஸ் ஸ்டாப் பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் இணைப்பு தரைப்பாலம் சீரமைக்கப்படுவதால் அப்பகுதி மக்களும் தேவி நகர், காந்திஜி முதல் தெரு வழியாகத்தான் சென்று திரும்புகின்றனர்.
காந்திஜி முதல் தெருவில் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியில் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதன் நுனிப்பகுதி தரையில் இருந்து அரை அடி உயரத்தில் உள்ளதால் டூவீலர்களில் செல்வோர் அவதி அடைகின்றனர். இரவில் நடந்து செல்வோர் கம்பிகளில் இடறி காயம் அடைகின்றனர்.
ஆபத்தான தரைப்பாலம் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.