sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்

/

குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்

குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்

குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் ஆதங்கம்


ADDED : ஜூலை 09, 2025 08:13 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: 'குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளால் எப்படி பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் துணைத் தாசில்தார் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

விவசாயிகள் மாரிச்சாமி, சிவராமன், சின்னையா, பாண்டி, லட்சுமணன், மாகமுனி உட்பட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தென்பழஞ்சி மானாவாரி கண்மாயில் சீமைக் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை தேவை. வரத்து கால்வாய்களைத் துார்வார வேண்டும். நுாறுநாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தென்கால் கண்மாய் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை.

மாடக்குளம் கிராமத்தில் பல பட்டாக்களில் சம்பந்தமே இன்றி எந்த ஆவணங்களும் இல்லாமல் நில உரிமைப் பதிவேட்டில் போலி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது எப்படி என்று தெரியவில்லை.

பல மாதங்களாக பல துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. அப்புறம் எப்படி எங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கடந்த கூட்டங்களில் வழங்கிய மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை தெரிவிப்பதே இல்லை என்றனர்.

உசிலம்பட்டி, ஜூலை 9-

தாசில்தார் வராததால் வெளிநடப்பு

: உசிலம்பட்டி தாலுகாவில் நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்கவிருந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன் அலுவலக பணியாக கலெக்டர் அலுவலம் சென்றதால் துணை தாசில்தார்கள் தாணுமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் நடத்த வந்தனர்.நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், 58 கிராம கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் தமிழரசன், காட்டுராஜா, விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிர்வாகி நேதாஜி உள்ளிட்டோர், 'மூன்றாவது முறையாக தாசில்தார் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சந்தை திடலுக்குள் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும், மதுரை ரோட்டில் விரிவாக்கப்பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நடவேண்டும், 58 கிராம கால்வாய் திட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கூட்டத்திற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் வருவதில்லை' என புகார் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஜூலை 11க்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.



குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது.விவசாயிகள் கூறியதாவது: பேரையூர் முருகன் கோயிலில் கிரிவலப் பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு பயிரிட்ட மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுவால் பாதித்தது. அதற்கு இழப்பீடு தர வேண்டும். அரசு ஒதுக்கிய மூன்று டிராக்டர்கள் பழுதாகி இருப்பதால் தனியார் டிராக்டர்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கு இரு மடங்கு செலவாகிறது. வேளாண் துறையினர் டிராக்டர்களை பழுது பார்த்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும். நாட்டு தென்னங் கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.








      Dinamalar
      Follow us