/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் மடை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் மடை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் மடை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் மடை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : அக் 09, 2025 05:35 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் சேதப்படுத்தப்பட்ட நடுமடைப் பகுதி தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நடுமடையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வரையுள்ள 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயின் நடு மடையின் ஆரம்ப பகுதியில் இருந்து 500 அடி நீளத்திற்கு கண்மாய்க்குள் இருபுறமும் சிமென்ட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது. இதனால் தண்ணீர் மடை வழியாக வெளியேறுவது சிரமமின்றி இருந்தது.
தென்கால் கண்மாய் கரையில் சில ஆண்டுகளுக்குமுன் வாகன போக்குவரத்திற்காக தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இப்பணி நடக்கும்போது கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் 2 மடைகளும் சேதமடைந்தன. ஒரு மடை சீரமைக்கப்பட்டது. நடுமடைப்பகுதி சீரமைக்கப்படாமல் விடுபட்டது.
சாலைப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் நடுமடை பகுதி சீரமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மடைப்பகுதி முழுவதும் உடனே சீரமைக்கப்பட்டது.
தினமலர் செய்தியால் தீர்வு விவசாயி ராமசாமி கூறியதாவது: பணி நடந்தபோது சேதமடைந்த மடைப்பகுதியை சீரமைத்து தருமாறு குறைதீர் கூட்டங்கள், கலெக்டர், தாசில்தார், நீர்வளத்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அப்பகுதியில் மணல் விழுந்து மடை அடைபட்டு விட்டது. இதனால் தண்ணீர் திறக்க முடியவில்லை. நெல் நடவும் பாதித்தது. அனைத்து துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் பலன் இல்லை.
தினமலர் செய்தி வெளியிட்ட பின், நீர்வளத் துறை சார்பில் நடுமடைப் பகுதி சீரமைக்கப்பட்டு சிமென்ட் குழாய்கள் அமைத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. தினமலர் நாளிதழ், பணி மேற்கொண்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்றார்.