தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பாவை (எளிய உரை--விளக்கம்)

 திருப்பாவை (எளிய உரை--விளக்கம்)

 திருப்பாவை (எளிய உரை--விளக்கம்)


ADDED : பிப் 12, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர் : ந.செ.கி. சங்கீத்ராதா

வெளியீடு : மீனாட்சி புத்தக நிலையம்

மயூரா வளாகம்

48, தானப்ப முதலி தெரு

மதுரை - 625 001

அலைபேசி : 99421 76893

பக்கம் : 148 விலை : ரூ.150

தி ருப்பாவைக்கு எத்தனையோ உரை நுால்கள் வெளிவந்துள்ள போதும், இக்கால மொழிநடைக்கேற்றவாறு மாணவர்களை மனதில் வைத்து எளிமையாக எழுதியுள்ளார் பேராசிரியை சங்கீத்ராதா.

ஆண்டாளின் பாசுரங்களின் வழியே வெளிப்படும் உணர்வை சுவையான மொழிநடையில் கடத்தி, படிக்கும் நம்மிடையே பக்தி பரவசத்தை பரவ வைக்கிறார்.

இந்த உரைநுாலை படித்து முடித்தவுடன், திருப்பாவை ஒரு பக்தி இலக்கியம் மட்டுமே என்று நினைத்திருப்பவர்களின் பார்வை மாறும். ஆண்டாள் பரிமாறுவது பக்தியில் கலந்த விஞ்ஞானம், மெய்ஞானம், சூழலியல், அழகியல் என ஆய்வு நோக்கில் நாம் அறியமுடியும்.

இந்நுாலில் சங்கீத்ராதா உரை, பொருள் கூறும் பணியை மட்டும் செய்யவில்லை; திருப்பாவையின் இலக்கியநலன்களை எடுத்துக்காட்டுவதாகவும், ஆய்வு நோக்குடையதாகவும் எளிமையாகவும் இருக்கிறது' என்று தமிழறிஞரும் முன்னாள் துணைவேந்தருமான ம.திருமலை அணிந்துரை எழுதியிருப்பதே இந்நுாலுக்கான தகுதியான மதிப்புரை. ↔- -ஜிவிஆர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us