ADDED : டிச 26, 2024 05:12 AM

மதுரை: மதுரை மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
எல்.கே.ஜி., முதல் 3ம் வகுப்பு குழந்தைகள் முதல் 5 பாசுரங்கள், 4 முதல் 7 ம் வகுப்பு மாணவர்கள் முதல் 10 பாசுரங்கள், 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் முதல் 15 பாசுரங்கள், பிளஸ் 1, பிளஸ் 2, கல்லுாரி மாணவர்கள் முதல் 20 பாசுரங்களை ஒப்புவித்தனர். 140 பேர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முரளி, லாவன்யா, வனிதா, வேலுநாச்சியார் நடுவர்களாக பங்கேற்றனர். மாணவர்களின் ஞாபகத்திறன், உச்சரிப்பு கருத்தில் கொள்ளப்பட்டன.
சிறப்பாக ஒப்புவித்த மாணவிகள் பொன் எழிலி, தியா, தனபாக்கியம், பூர்ணிமா, மகாலட்சுமி, தீட்சணா, தமிழினி, நிரஞ்சனா, பூஜாஸ்ரீ, ஜனனி பிரியா ஆகியோருக்கு பாவைச் செல்வி விருதும், மாணவர்கள் மாதவ் தர்ஷன், சுதர்ஷன், ஆதிரன், ராகவ் ஸ்ரீராம், முகேஷ் பாண்டி, அழகிய மணவாளன், அச்சுத்ராம், ஹரி அச்சுதன், அருண்குமார், தருண் ஆகியோருக்கு பாவைச் செல்வன் விருதும் வழங்கினர்.
அகாடமி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுஜாதா உட்பட பலர் ஒருங்கிணைத்தனர்.

