UPDATED : ஜூன் 07, 2026 11:09 PM
ADDED : ஜூன் 07, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் திருப்புகழ் சபை சார்பில் குழந்தைகளுக்கான திருப்புகழ் பாடும் போட்டி நடந்தது.
நிகழ்ச்சியில் அமுதன்,கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். திருப்புகழ் சபை பொருளாளர் செந்தில், உமா மகேஸ்வரி, சுப்பிரமணியம், சங்கர கைலாசம், சரோஜா பேசினர்.
போட்டியில் 10 வயதுக்குள், 11 - 19 வயது வரை என 2 பிரிவுகளில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். தனிப்போட்டியும் நடந்தது. வெற்றி பெற்ற குழுவுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. அமைப்பாளர் அருணகிரி நன்றி கூறினார்.
