ADDED : ஜன 17, 2026 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காமராஜர் பல்கலையில் திருக்குறள் இருக்கை சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலை வளாகத்தில் உள்ள சிலைக்கு பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.
பல்கலை முன்னாள் கண்காணிப்பாளர் சண்முகையா, சுற்றுலா, விடுதி மேலாண்மை துறை கவுரவ விரிவுரையாளர் சிவபாண்டி, தமிழ் ஆர்வலர் வீரபுத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருக்குறள் இருக்கை இயக்குனர் (பொ) மற்றும் தமிழியல் புலத்தலைவர் சத்தியமூர்த்தி செய்திருந்தார்.

