/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அத்தியாவசிய வசதிகளின்றி தவிக்கும் திரு.வி.க., தெரு மக்கள்
/
அத்தியாவசிய வசதிகளின்றி தவிக்கும் திரு.வி.க., தெரு மக்கள்
அத்தியாவசிய வசதிகளின்றி தவிக்கும் திரு.வி.க., தெரு மக்கள்
அத்தியாவசிய வசதிகளின்றி தவிக்கும் திரு.வி.க., தெரு மக்கள்
ADDED : ஜன 20, 2025 05:36 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 70வது வார்டு சத்தியமூர்த்தி நகர், திரு.வி.க., தெருவில் அடிப்படை வசதிகளின்றியும், பாதாள சாக்கடை அடைப்பாலும் நோயுடன் அவதிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இத்தெருவில் பாதாள சாக்கடை அடைப்பால் பல மாதங்களாக கழிவுநீர் தெருவில் தேங்கியுள்ளது. பழைய ரோடுகளின் மீதே புதிய ரோட்டையும் அமைத்துள்ளதால் வீடுகள் பள்ளத்தில் உள்ளன.ரோட்டில் தேங்கும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுகிறது. கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்பட்டு குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.
அப்பகுதி ஆனந்தி, சங்கர், லிங்கபாலன், ஹரிஹரன் கூறியதாவது: இங்கு 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வீடுகளுக்கு ஏற்ப பாதாள சாக்கடை பைப் லைன்கள் அமைக்கப்பட்டன. தற்போது குடியிருப்புகள் பெருகியுள்ளதால் ஓராண்டாக பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது.வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்குவதால் வெளியில் செல்ல முடியவில்லை.
கழிவுநீர் அகற்றும் லாரிகள் தெருவுக்குள் வருவதில்லை. குழந்தைகள், முதியோருக்கு காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து புகார் அனுப்பியும் பலனில்லை. கூட்டுக் குடிநீர் பணிகள்துவங்காததால், லாரி தண்ணீரை நம்பி உள்ளோம். துாய்மைப் பணியாளர்கள் முறையாக குப்பை அள்ளுவதில்லை. அனைத்து வரிகளையும் செலுத்தியும் அடிப்படை வசதி மட்டும் இல்லை என்றனர்.
கவுன்சிலர் அமுதா கூறியதாவது: 2001 - 06ல் இங்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. நாப்கின்கள், துணிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கவர்களால் சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. குப்பை தினமும் அள்ளப்படுகிறது. ரூ.15 லட்சம் செலவில் நேதாஜி தெருவில் தொட்டி அமைத்து கழிவுநீரை நிரப்பி, துரைச்சாமி நகர் பம்பிங் ஸ்டேஷனுக்கு அனுப்பும் திட்டம் விரைவில் துவங்க உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பகுதிகளில் கூட்டுக்குடிநீர் அமைக்கும் பணிகள் விடுபட்டுள்ளது. அதற்கான பணிகளும்விரைவில் துவங்கும் என்றார்.