ADDED : ஜன 02, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கப்பலூர் பாலத்தில் திருமங்கலம் நகர் எஸ்.ஐ., முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டூவீலர்களில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரித்த போது, பிறந்தநாள்
கொண்டாட்டத்திற்காக கேக் வெட்ட அவர்கள் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கப்பலூரை சேர்ந்த கவின் 22, அவரது நண்பர்கள் திவ்யதர்ஷின்21, கோபாலகிருஷ்ணன் 21, 23, ஆகியோரை கைது செய்தனர்.

