UPDATED : நவ 30, 2026 12:08 AM
ADDED : நவ 30, 2026 12:08 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவை சிந்தனை கவியரங்கம் நடந்தது. கவிஞர் ரா. ரவி வரவேற்றார். தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பொருளாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் வரதராஜன் எழுதிய ஜோதிர்லிங்க தரிசனம் என்ற நுாலை, புரட்சிப் பாவலர் மன்ற தலைவர் பி .வரதராஜன் வெளியிட்டார். சிறப்பாக கவிதை வாசித்த ஜெயசீலன், பாத்திமா பேகத்திற்கு கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கப்பட்டது. புதிதாக கவிபாடிய மூவருக்கு தென்னவன் விருது வழங்கப்பட்டது. தலைமைப் பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் நன்றி கூறினார்.
