ADDED : ஜூலை 16, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
திருநகர்: தனக்கன்குளம் சமாதான நகரை சேர்ந்தவர் கார்த்திக். மனைவி ஹரிணி தாய் வீட்டில் இருந்தார். மே 19ல் வீட்டை பூட்டிவிட்டு கார்த்திக் வெளியூர் சென்றார். மே 21ல் வீட்டிற்கு ஹரிணி வந்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு 5 கிராம் தங்க நாணயம், ரூ. 29,000 திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
அதே பகுதி ஜெயம் நகரை சேர்ந்த சரணின் பெற்றோர் மே 6ல் டில்லி சென்றனர். சரண் வீட்டை பூட்டி விட்டு எல்லீஸ் நகரில் இருந்தார். மே 21ல் அவர் வீடு திரும்புகையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் திருடுபோகவில்லை.
இதுதொடர்பாக துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பேச்சிமுத்து 27, அஞ்சனை செல்வன் 23, திருநெல்வேலி முருகனை 30, திருநகர் போலீசார் கைது செய்தனர்.
