தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மும்பையில் இருந்து விரைவு தபாலில் போதை மாத்திரை வாங்கிய மூவர் கைது

 மும்பையில் இருந்து விரைவு தபாலில் போதை மாத்திரை வாங்கிய மூவர் கைது

 மும்பையில் இருந்து விரைவு தபாலில் போதை மாத்திரை வாங்கிய மூவர் கைது


ADDED : பிப் 07, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மும்பையில் இருந்து மதுரைக்கு, விரைவு தபாலில், போதை மாத்திரைகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றும், பயன்படுத்தியும் வந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, தாதர் பகுதியில் இருந்து இரு நாட்களுக்கு முன், விரைவு தபால் மூலம், 'மினி பார்சல்' ஒன்று மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்தது. அது, ஆனையூரில் உள்ள ஒருவருக்கு, 'டெலிவரி' செய்யப்பட்டது.

கூடுதல் விலை அதேசமயம், போதை மாத்திரைகளை ஆன்லைனில், 'புக்கிங்' செய்தால், விரைவு தபால் மூலம் டெலிவரி செய்து வருவது குறித்து, தபால் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

தொடர்ந்து, போதை மாத்திரைகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றும், பயன்படுத்தியும் வந்ததாக, மதுரை தத்தநேரி கார்த்திக், 23, பார்த்தசாரதி, 24, நுார்ருதீன், 23, ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்து, 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களில் ஒருவர் உணவு டெலிவரி செய்பவர். அதோடு, போதை மாத்திரையையும் டெலிவரி செய்துள்ளார்.

போலீசார் கூறியதாவது:

சில உடல்நல பிரச்னைக்காக கொடுக்கப்படும் மாத்திரைகளை, போதைக்காக இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையான மாத்திரைகள் உள்ளூரிலேயே கிடைக்கும். ஆனால், டாக்டர் பரிந்துரையின்றி கிடைக்காது.

வலி நிவாரணி அமேசான், பிளிப்கார்ட் போன்ற வர்த்தக தளங்களில் இவ்வகையான வலி நிவாரண மாத்திரைகள் சப்ளை இல்லை என்பதால், 'வெல்கம் எக்ஸிம்' என்ற இணையதளம் மூலம் 'ஆர்டர்' கொடுத்து பெற்று வந்துள்ளனர்.

அதன் தலைமையகம் மும்பை என்பதால் அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us