ADDED : நவ 09, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே ஆலாவூரணியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகைராஜ், மணிகண்டன், திருத்தங்கல் பரோட்டா முத்துகிருஷ்ணன்.
இவர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது.
ராஜ்குமாரை 2010 ஜூன் 21 ல் கொலை செய்ததாக திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கார்த்திகைராஜ் உட்பட மூவருக்கும் 2023ல் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன் ஆஜரானார்.
கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

