/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டைடல் பார்க் திட்டம் துவக்க விழா ஒத்திவைப்பு
/
டைடல் பார்க் திட்டம் துவக்க விழா ஒத்திவைப்பு
ADDED : பிப் 13, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ரூ.280 கோடியில் டைடல் பார்க் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா பிப்.,18 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாட்டுத்தாவணியில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கரில் ரூ.280 கோடியில் இத்திட்டம் அமைகிறது. இதற்கான மண் பரிசோதனை, டெண்டர், சுற்றுச்சூழல், மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறப்பட்டது. பிப்.,13 ல் அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்யப்பட்டு பிப்.,18 ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

