தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆக்கிரமிப்பின் பிடியில் திலக் நகர் ரோடு

ஆக்கிரமிப்பின் பிடியில் திலக் நகர் ரோடு

ஆக்கிரமிப்பின் பிடியில் திலக் நகர் ரோடு


UPDATED : அக் 07, 2026 01:02 AM

ADDED : அக் 07, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:02 AM ADDED : அக் 07, 2026 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை 6வது வார்டு அய்யர்பங்களாவில் கிருஷ்ணன் கோயில் மைதானம் உள்ளது. அங்கு அடிக்கடி பல்வேறு அமைப்புகளின் சார்பில் பொருட்காட்சி உள்ளிட்டவை நடக்கின்றன.

இதற்கு வரும் வாகனங்கள் சென்று வருவதற்காக மைதானத்தின் வடக்கு பகுதியில் திலக்நகர் செல்லும் ரோட்டில் தற்காலிக பாதை அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ஆவணங்களின் படி 40 அடி அகலம் உள்ள திலக் நகர் ரோடு ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி 15 அடியாக சுருங்கி விட்டது. இந்த ரோட்டின் வடக்குபுறத்தில் 10 அடி அகல பாசன வாய்க்கால் இருந்தது. அதன் கரையில் 10 அடிக்கு பாதை இருந்தது. அந்த பாதையில் குடிசை அமைத்து சிலர் ஆக்கிரமித்தனர். பின்னர் படிப்படியாக வாய்க்காலையும் ஆக்கிரமித்தனர். தற்போது வாய்க்கால் தடமே தெரியாமல் மூடப்பட்டுவிட்டது.

வாய்க்காலை மறைத்தது மட்டுமின்றி அதன் தென் கரையில் குடிசை போட்டு திலக் நகர் ரோட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதனால் 40 அடி ரோடு தற்போது 15 அடி மட்டுமே உள்ளது. அதிலும் இருபுறமும் கட்டட கழிவுகள், குப்பைகளை போட்டு வைத்து பயன்படுத்த முடியாமல் செய்து சில மாதங்களில் தங்கள் பயன்பாட்டுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.

தற்போது உச்சப்பரம்பு மேட்டில் இருந்து வரும் வடக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அய்யர்பங்களா சிக்னல் வந்து காத்திருந்து இடது புறம் திரும்பி செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு பதில் ஆயில்மில்லை கடந்ததும் கால்வாய் கரையில் உள்ள ரோட்டையும், திலக் நகர் ரோட்டையும் சீரமைத்தால் ஆனையூர் பகுதியில் இருந்து திருப்பாலை, யாதவர் கல்லுாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் திலக்நகர் ரோடு வழியாக சென்றுவிட முடியும். இதனால் சிக்னலில் நெரிசலும் குறையும்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us