தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சிறப்பு பஸ்கள் இயக்கம்

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சிறப்பு பஸ்கள் இயக்கம்

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : பிப் 06, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: 'மதுரையில் பிப்.8 மற்றும் 22 ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுகளுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் பிப்.8 ல் குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி.யாதவர் மகளிர் கல்லுாரியில் காலை, மாலை என இருவேளைகளில் நடக்க உள்ளது. காலை அமர்வில் 579 பேர், மாலையில் 595 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை நேர தேர்வு 9:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரையும், மாலையில் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் நடைபெறும்.

மேலும் பிப்.22 அன்று குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு அவுட்போஸ்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் காலையில் மட்டும் 150 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த இரண்டு தேர்வு மையங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பஸ்கள், தடையற்ற மின்சாரம், குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு பின்பும், மதியம் 2:00 மணிக்கு பின்பும் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கட்டாயம் தேர்வர்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us