நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விளக்குத்துாண் தனிப்படை போலீசார் கீழமாசி வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கந்திலால்30, டூவீலரில் வந்தார்.
அதிலிருந்த பையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கணேஷ் புகையிலை 50 கிலோவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர். அவர்,'பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி தமிழ்ச் சங்கம் சாலையிலுள்ள ஒரு ஆட்டோ உதிரி பாக கடையில் பதுக்கி வைப்போம். கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்வோம்,' என்றார். அக்குடோனில் பதுக்கி வைத்திருந்த 206 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். டூவீலர், 3 அலைபேசிகளை கைபற்றினர். போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.