/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (03.01.2026) மதுரை
/
இன்று இனிதாக ... (03.01.2026) மதுரை
ADDED : ஜன 03, 2026 05:32 AM
ஆருத்ரா தரிசனம்
மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சசபை ஐந்து உற்ஸவ நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா: மாசி வீதிகள், மதுரை, காலை 7:00 மணி.
குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா: நடராஜர் கோயில், அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: அனுப்பானடி ஆருத்ரா தரிசன இரவு உற்ஸவ அறக்கட்டளை, இரவு 7:00 மணி.
கோயில்
திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து 5ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி.
திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து 5ம் நாள்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் - சுஜாதா, மாலை 6:00 மணி.
திருவாதிரை நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி, சந்திரமவுலீஸ்வரருக்கு விசேஷ அபிஷேகம், காலை 6:00 மணி.
மார்கழி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, காலை 7:45 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமாநுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, மாலை 6:30 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி சத்சங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, ஏற்பாடு: வேதாந்தா அறக்கட்டளை, காலை 9:15 மணி.
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சந்திரகாந்தன், முன்னிலை: லுாலா, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
மார்கழி பாவை விழா: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவை பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
ஆருத்ரா தரிசனம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.
பொது
தாரா மந்த்ர சஹித சண்டீ ஹோமம்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, காலை 9:00 முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.
74வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு: அபிஷேக் ரகுமான், வயலின் - கமலகிரன் விஞ்சமுரி, மிருதங்கம் - கிஷோர் ரமேஷ், கஞ்சிரா - சுமுக் கரந்த், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 183வது ஜெயந்தி இசை, இலக்கிய, கலை விழா: ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சங்கீத மஹால், தெப்பக்குளம், மதுரை, சுவாமிகள் அலங்காரம்: முத்தங்கி சேவை, தலைமை: கீதா நடன கோபால நாயகி மந்திர் தலைவர் ஞானப்பிரபாகரன், பொருளாளர் குப்புசாமி, சிறப்பு விருந்தினர்: அரசு தொழிலாளர் கமிஷனர் ராமன், மாலை 6:30 மணி, ராதே கிருஷ்ணா மகளிர் குழுவின் கோலாட்டம், மாலை 5:30 மணி.
'எழுத்தாளர் மேடை' - கவிஞர் குட்டி எழுதிய ராசாத்தி நுால் அறிமுகம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, மாலை 5:00 மணி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சியாளர் ராபின் ராஜகாந்தன் வழங்கும் சதுரங்கம் அடிப்படை பயிற்சி, மாலை 5:30 மணி, பயற்சியாளர்கள் கவுசல்யா, ஞானசுந்தரி வழங்கும் அபாகஸ் பயிற்சி, மாலை 5:30 மணி, 'நிலவொளியில்' - பவுர்ணமி நிலவு ஒளியில் புத்தக விமர்சனம், மாலை 6:00 மணி.
நன்றி நவிலும் விழா: பகல் இரவு ஸ்போர்ட்ஸ் ஹப், துரைசாமி நகர், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி விளையாட்டு துறைத் தலைவர் ரங்கராஜன், ஏற்பாடு: மதுரை 11 கிரிக்கெட் அணி, மாலை 5:00 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை, கள்ளந்திரி நாடக அரங்கம், ஏற்பாடு: ஐஸ்வர்யா சக்தி சாரிடபிள் டிரஸ்ட், காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.
கண்காட்சி
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க வர்த்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்கா முருகன் கோயில் மண்டபம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
வைர நகைகள் கண்காட்சி, விற்பனை: ஓட்டல் கோர்ட் யார்ட் மேரியட், மதுரை, ஏற்பாடு: சலானி ஜூவல்லரி, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
இயற்கை சார்ந்த, மகளிர் சுய உற்பத்தி பொருள்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

