/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இ்ன்று இனிதாக ... (03.12.2025) மதுரை
/
இ்ன்று இனிதாக ... (03.12.2025) மதுரை
ADDED : டிச 03, 2025 06:39 AM
கோயில் கார்த்திகை திருவிழா - 9ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சிறிய தேரில் சுவாமி வீதி உலா, காலை 7:00 மணி, பால தீபம் ஏற்றி மலைமேல் கார்த்திகை மகா தீபம், மாலை 6:00 மணிக்கு மேல், தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி.
கார்த்திகை பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, காலை 8:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சியாமளா, முன்னிலை: ஹம்சினி, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பொது பேராசிரியர் பொன் சுப்பையாவின் 'செவ்வியல் மற்றும் தற்காலத் தமிழ்த் தனி வினை அகராதி - பகுதி ஒன்று' நுால் வெளியீடு, சிறப்பு சொற்பொழிவு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முத்தையா, பங்கேற்பு: மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா, மதியம் 2:00 மணி.
பள்ளி, கல்லுாரி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடனம், கதை சொல்லுதல் உள்ளிட்ட கலாசார போட்டிகள்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி துணை முதல்வர் அருள்மேரி, முன்னிலை: தலைமை நுாலகர் தினேஷ்குமார், ஏற்பாடு: பாத்திமா கல்லுாரி, கலைஞர் நுாலகம், காலை 10:30 மணி.
தமிழ் கூடல் விழா: ரூபி மெட்ரிக் பள்ளி, மதுரை, தலைமை: தாளாளர் வெங்கடேசன், உள்ளம் அள்ளும் வள்ளுவம் தலைப்பில் பேசுபவர்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆதலையூர் சூரியகுமார், முன்னிலை: கவிஞர் வாசகன், இளங்கோ முத்தமிழ் மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், இளங்கோ முத்தமிழ் மன்றம், காலை 10:30 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மேலவாசல், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் 'சரஸ் மேளா', உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

