/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இ்ன்று இனிதாக ... (04.12.2025) மதுரை
/
இ்ன்று இனிதாக ... (04.12.2025) மதுரை
ADDED : டிச 04, 2025 06:02 AM
கோயில் கார்த்திகை திருவிழா - பத்தாம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:00 மணி, தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மணி, இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: அமுதா, முன்னிலை: ஹரிமீனாட்சி, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
கார்த்திகை தீபம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, கார்த்திகை தீபம் ஏற்றி அருணாச்சலசிவ முதலிய சிவநாமாவளி பாடுதல், மாலை 6:00 மணி, ஆரதி, பஜனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.
அகண்ட ஹரே ராமா மகா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.
பொது வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கார்த்திகை பவுர்ணமி தீபாராதனை வழிபாடு: பேச்சியம்மன் படித்துறை வைகை ஆற்றங்கரை, மதுரை, தலைமை: தலைவர் ராஜன், மாலை 6:00 மணி.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிறுவனர் வெள்ளையன் பிறந்தநாள் விழா: திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை எக்கோ பார்க் அருகில், தலைமை: வெள்ளையன் அறக்கட்டளை தலைவர் ராஜபாண்டி, மரம் நடுதல், நீர் மோர் வழங்குதல், அன்னதானம், காலை 9:00 மணி முதல்.
சமயநல்லுார் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மதுரை வடக்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, தலைமை: செயற்பொறியாளர் முத்துக்குமார், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி தமிழ்க் கூடல் விழா: ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, இளமனுார், தலைமை: தலைமை ஆசிரியர் கனகலட்சுமி, சிறப்பு விருந்தினர்: கவிஞர் மூரா, முன்னிலை: ஆசிரியர் மகேந்திரபாபு, காலை 10:00 மணி.

