தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று இனிதாக .... (07.03.2026) மதுரை

 இன்று இனிதாக .... (07.03.2026) மதுரை

 இன்று இனிதாக .... (07.03.2026) மதுரை


ADDED : மார் 07, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் குரு பூஜை விழா: ஆதி தவ மகாயோகி கவுடபாதர் சித்தர் அதிஷ்தாணம் கோயில், சக்குடி, மதுரை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 5:00 மணி.

நாளை நடக்கும் இந்தியா - நியூசிலாந்து இடையே நடக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் கோயில், எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காலை 8:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

மாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, காலை 11 :00 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி பட்டமளிப்பு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, சிறப்பு விருந்தினர்: மகாத்மா பள்ளிக் குழும நிர்வாக இயக்குநர் பிரேமலதா, காலை 10:00 மணி.

33வது ஆண்டு விழா: எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் பள்ளி, கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினர்: தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குநர் ரமேஷ், மாலை 5:00 மணி.

பொது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணையும் விழா: ராயபாளையம் விலக்கு, திருமங்கலம், தலைமை: முதல்வர் ஸ்டாலின், மாலை 5:00 மணி.

வயலகம் பரஸ்பர இயக்கம் வெள்ளிவிழா: தானம் அறக்கட்டளை அலுவலகம், மஹபூப் பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வானதி, காலை 10:00 மணி.

த.வெ.க., கொள்கை விளக்க தேர்தல் பிரசார கூட்டம்: ஓபுளா படித்துறை, முனிச்சாலை ரோடு, மதுரை, தலைமை: மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை, சிறப்புரை: மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார், மாலை 6:00 மணி.

இயற்கை சார்ந்த மகளிர் சுய உற்பத்தி பொருள்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரவீணா, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் நல்லகண்ணுவுக்கு இரங்கல் கூட்டம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பங்கேற்பு: பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 6:00 மணி.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி, சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

மகளிர் தின விழா யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஓட்டல் பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ். கண்ணன், காலை 10:00 மணி.

பாண்டியன் சரஸ்வதி யாதவர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சரஸ்வதி, காலை 10:00 மணி.

மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: குயின் மீரா பள்ளி கல்வியாளர் இந்திரா விஜயலட்சுமி, காலை 10:30 மணி.

வைகை பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மேலுார் ஆர்.டி.ஓ., சங்கீதா, சிவகங்கை கன்னங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பாக்கியம், காலை 11:30 மணி.

ஆயுதப்படை குடியிருப்பு வளாக கிளை நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: போலீஸ் துணை கமிஷனர் ராஜேஸ்வரி, யாதவர் கல்லுாரி உதவி பேராசிரியர் சத்யபாமா, ஏற்பாடு: வாசகர் வட்டம், மாலை 4:30 மணி.

கே.பி.எஸ்., திருமண மஹால் பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, சிறப்பு விருந்தினர்: ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் காந்திமதி, திறன் மேம்பாட்டுக்கழக உதவி இயக்குநர் செந்தில் குமார், ஏற்பாடு: பெட்கிராட், காலை 11:00 மணி.

கருத்தரங்கம்: அரசு ஊழியர் சங்க கட்டடம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் தமிழ், சிறப்பு விருந்தினர்: மாநில செயலாளர் ஜெசி, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மதியம் 2:00 மணி.

ஸ்த்ரீ ரத்னா விருது வழங்குதல்: யூனியன் கிளப், காந்திமியூசியம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், நடிகர் வையாபுரி, ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

கோலப் போட்டி: விளையாட்டு திடல், அழகப்பன் நகர், பழங்கா நத்தம், மதுரை, ஏற்பாடு: அழகப்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மதியம் 3:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us