ADDED : மார் 14, 2026 06:15 AM
கோயில்
பங்குனி பெருந்திருவிழா - 3ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாரியம்மன் சிம்ம வாகனத்தில் தெப்பக்குளம் வலம் வருதல், இரவு 7:25 மணி, சிறப்பு அபிஷேகம், இரவு 9:00 மணி.
ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 58வது ஜெயந்தி உற்ஸவம்: கணபதி, சுதர்சன, தன்வந்திரி ேஹாமங்கள், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, காலை 7:00 மணி.
சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58வது ஜெயந்தி உற்ஸவம்: காஞ்சி காமகோடிபீடம், முள்ளிப்பள்ளம் கிளை, காலை 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, புல்லாங்குழல் இன்னிசை நிகழ்த்துபவர் - சாய் கிருஷ்ணா, இரவு 7:00 மணி.
நாம சங்கீர்த்தனம்: வரதராஜ பெருமாள் கோயில், ஹார்விபட்டி, மாலை 6:00 மணி.
கோயில் வழிபாடு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
ஆண்டு விழா: அமிர்தா நர்சரி, பிரைமரி பள்ளி, அம்பலகாரன்பட்டி, உத்தங்குடி, சிறப்பு விருந்தினர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழுமம், அறங்காவலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் தன்ராஜ், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க பொருளாளர் காந்தி, மாலை 4:30 மணி.
2023 - 24, 2024 - 25ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், பரிசு வழங்குபவர்: ஓட்டல் பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், காலை 10:00 மணி.
ஆண்டு விளையாட்டு விழா: வைகை பொறியியல் கல்லுாரி, விநாயகபுரம், தலைமை: முதல்வர் (பொறுப்பு) சிவரஞ்சனி, சிறப்பு விருந்தினர்: மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் ராஜா, இந்திய விளையாட்டு ஆணையம் மகாராஷ்டிராவின் ஜூனியர் மிட் கோச் நாகதர்ஷினி, ஒருங்கிணைப்பாளர்: கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் அனந்த், காலை 9:30 மணி.
பொது
சர்வதேச விமான நிலையம் அறிவித்தல், புதிய வான் போக்குவரத்து கன்ட்ரோல் டவருடன் தொழில்நுட்ப கட்டடம் திறப்பு விழா: விமான நிலையம், மதுரை, தலைமை: இயக்குநர் முத்துக்குமார், சிறப்பு விருந்தினர்கள்: மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காலை 11:00 மணி.
பொது விநியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்: குடிமைப் பொருள் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்கள், மதுரை, ஏற்பாடு: மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
தி ஷீ கோடு: ஓட்டல் ஜி.ஆர்.டி., கிராண்ட், ரிங் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: நடிகை ராதிகா, ஏற்பாடு: யங் இந்தியன்ஸ், இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
கள்ளர் பள்ளி வரலாறு மீட்பு போராட்டம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், தமுக்கம் எதிரே, மதுரை, ஏற்பாடு: அனைத்து கள்ளர் கூட்டமைப்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பாதுகாப்பு கூட்டமைப்பு, காலை 10:00 மணி.
மதுரை காமராஜ் பல்கலை வரலாற்றுத்துறை பேராசிரியர் தங்கமுத்து நினைவு அறக்கட்டளை விழா: திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மன்றத் தலைவர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: பல்கலை தமிழியல் துறைத் தலைவர் சாரதாம்பாள், அறக்கட்டளை ஆலோசனைக்குழு தலைவர் உமாராணி, மாலை 4:30 மணி.
கனகசபாபதி நினைவுச் சொற்பொழிவு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: எஸ்.பி.ஐ., முன்னாள் தலைமை பொது மேலாளர் ஆறுமுக பாண்டி, சிறப்புரை: திருச்செந்துார் ஆதித்தனார் கலை அறிவியல் கல்லுாரி பொருளாதத்துறை முன்னாள் பேராசிரியர் பரதன், ஏற்பாடு: கனகசபாபதி அறக்கட்டளை, காலை 10:30 மணி.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
சூட்ஸ், சாரீஸ், குர்தீஸ் - சம்மர் சேல்: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஹம்சா பொட்டிக், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
