/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (18.02.2026) மதுரை
/
இன்று இனிதாக ... (18.02.2026) மதுரை
ADDED : பிப் 18, 2026 06:10 AM
கோயில் மாசித் திருவிழா: அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, சுவாமி அதிகார நந்திகேஸ்வர வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வருதல், இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு தமிழர்களின் தாய்மதம் - சங்க காலத்தின் சமயம் எது : நிகழ்த்துபவர் - ரங்கன், விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ராம சமாஜம், மாலை 6:30 மணி.
சைவ சித்தாந்தம்: நிகழ்த்துபவர் - கண்ணன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைப்பு: நாயன்மார் நாவினில் மணந்த தமிழ், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:30 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர்: டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது மதுரை உற்பத்தி கவுன்சில்: பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: உற்பத்தி கவுன்சில் தலைவர் ஜெகன்மோகன், சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு சிறு, குறுந் தொழிற்சாலை சங்கத் தலைவர் வாசுதேவன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ், காலை 11.00 முதல் மதியம் 1:30 மணி வரை.
பள்ளி, கல்லுாரி 69வது ஆண்டு விழா: தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: தாளாளர் வள்ளி, சிறப்பு விருந்தினர்: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கேசவதாசன், மாலை 4:30 மணி.
சர்வதேச பெண் விவசாயி ஆண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்லுாரி, மதுரை, பயிற்சி வகுப்பு, தலைமை: டீன் காஞ்சனா, துவக்கி வைப்பவர்கள்: மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஓய்வுபெற்ற இயக்குனர் ராம் ராஜசேகரன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் மிருதுளா தேவி, காலை 9:00 மணி.
பள்ளி மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு திருவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கல்லுாரி நுாலகம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, காலை 10:30 மணி.
போட்டித் தேர்வுகளுக்கான கணித மாதிரித் தேர்வு-பயிற்சி வகுப்பு: வெள்ளைச்சாமி கல்லுாரி, மதுரை, துவக்குபவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, காலை 10:30 மணி.
பாலின பிரச்சினைகளால் ஏற்படும் மனநலப் பாதிப்பு குறித்த கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஹன்னா ஜோசப் மருத்துவமனை டாக்டர் கவிதா, ஏற்பாடு: இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு - மகளிர் இணையம், கல்லுாரியின் பாலின சமத்துவ கண்காணிப்புக்குழு, காலை 10:30 மணி.
கண்காட்சி ராஜஸ்தான் மேளா-பருத்தி, பட்டு கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

